கணித தேர்வு எழுத சென்ற 10-ம் வகுப்பு மாணவி மாயம்
கணித தேர்வு எழுத சென்ற 10-ம் வகுப்பு மாணவி மாயமனார்.
தஞ்சாவூர் மாவட்டம், நெய்வேலி வடபாதி பகுதியை சேர்ந்தவர் ராணி. இவரது மகள் கீர்த்திகா (வயது 15). இவர் கறம்பக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 13-ந் தேதி கணித தேர்வு எழுதச் சென்றார். தேர்வு எழுதிய பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. உறவினர் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கீர்த்திகா கிடைக்கவில்லை. நேற்றுமுன்தினம் நடந்த அறிவியல் தேர்வு எழுதவும் கீர்த்திகா செல்ல வில்லை. இதுகுறித்து அவரது தாய் ராணி கறம்பக்குடி போலீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.