லாலு பிரசாத் யாதவ் விரைவில் நலம்பெற வேண்டும்- டாக்டர் ராமதாஸ், அன்புமணி விருப்பம்

பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார்.

Update: 2022-12-06 14:16 GMT

சென்னை,

பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது. அவரது மகள் ரோகினியே சிறுநீரகம் தானம் செய்தார். தற்போது சிகிச்சைக்கு பின்னர் அவர் ஐ.சி.யூ. வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தநிலையில் லாலு பிரசாத் யாதவ் விரைவில் நலம் பெற கோரி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள எனது நண்பரும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் விரைவில் முழு நலம் பெற்று பொதுவாழ்விலும், சமூகநீதிக் களத்திலும் மீண்டும் தீவிரமாக செயல்பட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்'', என கூறியுள்ளார்.

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்தியாவில் சமூகநீதிக்காக போராடி வரும் தலைவர்களில் ஒருவரான லாலு பிரசாத் சிங்கப்பூர் அஸ்பத்திரியில் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். அவர் முழுமையாக குணமடைந்து மக்கள் பணியில் மீண்டும் தீவிரமாக செயல்பட வாழ்த்துகிறேன்'', என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்