மக்கள் வாழ்வில் புதிய எழுச்சியும் மகிழ்ச்சியும் பிறக்கட்டும் - எல்.முருகன் புத்தாண்டு வாழ்த்து
பாசத்திற்குரிய தலைவர் மோடி அவர்கள் மீண்டும் பிரதமராக பதவி ஏற்க ஒவ்வொருவரும் இந்த நேரத்தில் சூளுரை ஏற்போம்
சென்னை,
மத்திய இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 2024-ம் ஆண்டு மலரும் இந்த இனிய நேரத்தில் மக்கள் வாழ்வில் புதிய எழுச்சியும் மகிழ்ச்சியும் பிறக்கட்டும். நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் பாரத தேசம் முழுவதும் கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் வளர்ச்சி பணிகளும், மக்கள் நலத்திட்டங்களும் இந்த ஆண்டில் மற்றுமொறு புதிய உச்சத்தை தொடரட்டும்.
தமிழக மக்களுக்கு புதிய புத்தாண்டு வெற்றிகள் குவிக்கும் ஆண்டாக, மாநிலத்தில் தீமைகள் அகன்று நன்மைகள் பிறக்கும் ஆண்டாக மலரட்டும். கடந்த கால இருள் அகன்று மக்களின் கவலைகள் எல்லாம் நீங்க வேண்டும் என இறைவனை பிராத்தித்துக் கொள்கிறேன். கடந்த ஆண்டின் அனுபவங்கள் அனைத்தும், புதிய ஆண்டில் நாம் நம்பிக்கையுடன் பயணிக்க உதவட்டும்.
வளர்ச்சியை வழங்கும் ஆண்டாக மலரட்டும் என வேண்டுவோம். தமிழகத்தில் சூழ்ந்துள்ள இருள் நீங்கி புதிய ஒளி பிறக்கட்டும். வரவுள்ள 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்திற்கு அடிகோலும். இதன் மூலம் தமிழக மக்கள் வாழ்வில் ஒளிமயமான எதிர்காலம் உருவாகும்.
2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நாடுமுழுவதும் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெற்று, மக்கள் போற்றும் பாசத்திற்குரிய தலைவர் மோடி அவர்கள் மீண்டும் பாரத பிரதமராக பதவி ஏற்க ஒவ்வொருவரும் இந்த நேரத்தில் சூளுரை ஏற்போம். அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.