முத்தாரம்மன் கோவிலில் மாவிளக்கு பூஜை

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் மாவிளக்கு பூஜை நடந்தது.

Update: 2022-12-10 18:45 GMT

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு 8 மணிக்கு கால சந்திபூஜை நடைபெற்றது. மதியம் 1மணிக்கு உச்சி கால பூஜை நடைபெற்று அதனைத் தொடர்ந்து 1.30 மணிக்கு நடை திருக்காப்பிடுதல் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு மாவிளக்கு பூஜையும், 9.30 மணிக்கு இராக்கால பூஜையும் நடைபெற்றது. மாவிளக்கு பூஜையில் குலசேகரன்பட்டினம் சுற்று வட்டார பெண்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்