மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு 18-ந் தேதி வருகை- பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 18-ந் தேதி வர உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

Update: 2023-02-08 21:12 GMT


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 18-ந் தேதி வர உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

மீனாட்சி அம்மன் கோவில்

இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, வருகிற 18-ந் தேதி மகா சிவராத்திரி தினத்தன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அன்றைய தினம் அவர் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, மதுரை விமானநிலையம் வருகிறார்.

மதியம் 12 மணிக்கு மேல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்கிறார். பின்னர் விமானநிலையம் சென்று கோவை செல்கிறார். அங்கு ஈஷா ைமயத்தில் நடக்கும் மகாசிவராத்திரி விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிய வருகிறது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, "ஜனாதிபதி வருவதாக தகவல் வந்துள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். ஆனால் அவர் வருவது குறித்த தகவல் ஓரிரு தினங்களுக்கு முன்புதான் உறுதி செய்யப்படும். ஆனாலும் நாங்கள் இப்போது இருந்தே பாதுகாப்பு முன்ஏற்பாடுகளை தொடங்கி உள்ளோம்" என்றார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கடந்த 2021-ம் ஆண்டு பிரதமர் மோடி வருகை தந்தார். தற்ேபாது, ஜனாதிபதி திரவுபதி முர்மு, மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது. அவர் ஜனாதிபதியாக பதவி ஏற்றபின் மதுரைக்கு முதன்முறையாக வருவதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்