மாட்டு பொங்கல் விழா கொண்டாட்டம்

விழுப்புரத்தில் மாட்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-01-16 18:45 GMT

ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 2-ம் நாள் மாட்டு பொங்கல் விழா, விவசாயிகளால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள வளவனூர், கோலியனூர், சாலாமேடு, காணை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மாட்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

விழாவையொட்டி விவசாயிகள் தங்களது வீடுகளில் வளர்க்கும் மாடுகளை குளிக்க வைத்து அதன் கொம்புகளில் வர்ணங்களை பூசி மாலை அணிவித்தனர். பின்னர் மாடுகளுக்கு பிடித்தமான உணவுகளை வழங்கினர்.

கிராமங்களில் வலம்

தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட மாடுகளை வண்டிகளில் பூட்டி மந்தக்கரைக்கு அழைத்துச்சென்றனர். பின்னர் அங்கு மாடுகளுக்கு படையலிட்டு வணங்கினர். இவை முடிந்ததும் மாட்டு வண்டிகளில் ஊர்வலம்போல் கிராமங்களின் ஒவ்வொரு தெருக்கள் வழியாகவும் சுற்றி வலம் வந்தனர். அப்போது சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும், பொங்கலோ பொங்கல்..... மாட்டு பொங்கல்.... என்று கூச்சலிட்டவாறே சென்றனர்.

அதேபோல் விவசாயிகள் பலர், தங்களது மாடுகளை குளிக்க வைத்து அதன் கொம்புகளில் வர்ணம் பூசி தங்கள் தெருக்களில் அழைத்துச்சென்று மாடு விரட்டினார்கள். இதை சிறுவர், சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்த்து ரசித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்