கடையம்:
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தென்காசி மாவட்ட கடையம் ஒன்றிய முதல் மாநாடு நடந்தது. பாரதி தலைமை தாங்கினார். கோவன்குளம் கிளை துணைத்தலைவர் கவிதா வரவேற்றார். மாவட்ட தலைவர் ஆயிஷா மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வேல்முருகன், சி.பி.ஐ.எம். கடையம் ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். மாநாட்டை நிறைவு செய்து மாவட்ட செயலாளர் மேனகா பேசினார். தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில் வாகைகுளம் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைத்து தர வேண்டும். வாகைகுளம் விஷ்ணு நகரில் சிமெண்டு சாலை அமைத்து தர வேண்டும். வெய்காலிபட்டியில் இருந்து மைலபுரம் செல்லும் பாதையில் அங்கன்வாடி மையம் அருகே உள்ள அரசு டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். 100 நாள் வேலை செய்யும் இடங்களில் சுகாதாரமான குடிதண்ணீர் மற்றும் முதலுதவி பெட்டி அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.