கணிதத்துறை கருத்தரங்கு
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கணிதத்துறை சார்பில் கருத்தரங்கு நடந்தது.
பேட்டை:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கணிதத்துறை சார்பில், இயற்கணித வரைபடக் கோட்பாடு மற்றும் பகுப்பாய்வு என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கு நடந்தது. கணிதத்துறை தலைவர் மணிகண்டன் வரவேற்றார். துணைவேந்தர் சந்திரசேகர் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். கருத்தரங்கில், ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.