மகப்பேறு துணை செவிலியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்

தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் மகப்பேறு துணை செவிலியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது

Update: 2022-09-25 18:45 GMT


தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் மகப்பேறு துணை செவிலியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருவாரூரில் நடந்தது.

கூட்டத்திற்கு மாநில தலைவர் இந்திரா தலைமை தாங்கினார். இதில் மாநில பொதுச்செயலாளர் நீலா, மாநில செயலாளர் வசந்தா, மாநில பொருளாளர் வசந்தா, திருவாரூர் மாவட்ட தலைவர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

பதவி உயர்வு

கிராம சுகாதார செவிலியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். துணை சுகாதார மைய கட்டிட வாடகை மின் கட்டணம் ஆகியவைகள் கிராம சுகாதார செவிலியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது.

பல துணை சுகாதார மையங்களின் கட்டிடம் பாழடைந்துள்ளது. இருப்பினும் கிராம சுகாதார செவிலியர்களிடம் கட்டிடத்திற்கான வாடகை தொகை ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டும்.

காலமுறை ஊதியம்

பல ஆண்டுளாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் மகப்பேறு துணை செவிலியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி தர வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்