அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள்
அகழாய்வில் அரிய வகையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதியில் நடந்து வரும் அகழாய்வு பணியில் பல்வேறு அரிய வகை பொருட்கள் கிடைத்து வருகின்றன. இப்பகுதியில் கிடைக்கும் பொருட்கள் அடிப்படையில் இப்பகுதியிலும் பழங்காலத்தில் நாகரீகம் சிறந்தோங்கியுள்ளது தெரியவந்துள்ளது. அந்த வகையில் தொடர்ந்து இந்த பகுதியில் அரிய வகை பொருட்கள் கிடைத்து வருகின்றன. இதையடுத்து தற்போது சுடுமண்ணால் ஆன மனிதத்தலை, பறவையின் தலைப்பகுதி ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.