தீப்பெட்டி மூலப்பொருட்களை மானிய விலையில் வழங்க சி.ஐ.டி.யு. கோரிக்கை

தீப்பெட்டி மூலப்பொருட்களை மானிய விலையில் வழங்க வேண்டும் என்று சி.ஐ.டி.யு. மாவட்ட மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-09-05 11:46 GMT

கோவில்பட்டி:

தீப்பெட்டி மூலப்பொருட்களை மானிய விலையில் வழங்க வேண்டும் என்று சி.ஐ.டி.யு. மாவட்ட மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாநாடு

கோவில்பட்டி தனியார் மண்டபத்தில் தூத்துக்குடி மாவட்ட சி.ஐ.டி.யு. 11-வது மாவட்ட மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் பேச்சிமுத்து தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் குமாரவேல் கொடி யேற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநிலச் செயலாளர் தங்க மோகனன் மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசினார். மாவட்டச் செயலாளர் ரசல் வேலை, அறிக்கையையும், மாவட்டப் பொருளாளர் அப்பாதுரை வரவு, செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர்.

கோரிக்கை

மாநாட்டில், தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க வேண்டும். தீப்பெட்டி பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் இருந்து ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தீப்பெட்டி மூலப்பொருட்களை மானிய விலையில் வழங்க வேண்டும். கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

மாநாட்டில் புதிய மாவட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநில மாநாடு பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். பின்னர் கிருஷ்ணன் கோவில் திடலில் நடந்த பொதுக் கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் மோகன்தாஸ் தலைமை தாங்கினார். கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. சின்னத் துரை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்