மாதர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம்

பழனியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாதர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-17 18:45 GMT

பழனி நகர, ஒன்றிய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், பழனி தாலுகா அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் வனஜா தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். போராட்டத்தின்போது, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கும் 100 நாள் வேலை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தில் முறையாக சம்பளம் வழங்க வேண்டும், பட்டா கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் உடனடியாக பட்டா வழங்க வேண்டும், முதியோர் உதவித்தொகையை கால தாமதப்படுத்த கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். தொடர்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அவர்கள் பழனி தாலுகா அலுவலகத்தில் வழங்கினர்.


Tags:    

மேலும் செய்திகள்