மகாமாரியம்மன் கோவிலில் மாசண்டி யாகம்
திருவளர்மங்கலம் மகாமாரியம்மன் கோவிலில் மாசண்டி யாகம் நடந்தது.
திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியம் சியாத்தமங்கை ஊராட்சி திருவளர்மங்கலத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது.இந்த கோவிலில் கடந்த மாதம் குடமுழுக்கு நடைபெற்றது.இதை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற்று வந்ததுஇதன்.நிறைவு நாளான நேற்று மண்டல அபிஷேக பூர்த்தி நவசக்தி அர்ச்சனை மற்றும் மகா சண்டியாகம் நடந்தது. முன்னதாக அம்மனுக்கு நவசக்தி அர்ச்சனை, அனுக்ஞை, சந்தனக்காப்பு அலங்காரம், விக்னேஸ்வர பூஜை, கோ தானம், தீபாரதனை நடைபெற்றது.தொடர்ந்து பைரவர் பலி தானங்கள், சுவாசினி, வடுக பூஜை, பட்டுப்புடவை ஹோமம், தீபாரதனை, கலசாபிஷேகம் உள்ளிட்டவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.