மேட்டூர் அனல் மின்நிலையம் அருகேமுதியவர் கழுத்தை அறுத்து படுகொலை
மேட்டூர் அனல் மின்நிலையம் அருகே முதியவர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார்.
மேட்டூர்
மேட்டூர் அனல் மின்நிலையம் அருகே முதியவர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார்.
முதியவர் படுகொலை
சேலம் மாவட்டம், மேட்டூர் அனல் மின்நிலைய 4 ரோடு அருகே 55 முதல் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இதனிடையே நேற்று காலையில் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் முதியவர் படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பது குறித்து மேட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விசாரணை
அதன்பேரில் மேட்டூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மரியமுத்து, மேட்டூர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கில் துப்பு துலக்க தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை ஆய்வு செய்தனர்.
கொலை செய்யப்பட்ட முதியவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. அவர் அந்த பகுதியில் அடிக்கடி சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது. இவரை யார் கொலை செய்தார்கள்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலை நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.