கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும்

சுதந்திரதினத்தையொட்டி நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என கலெக்டர்பழனி வேண்டுகோள் விடுத்தார்.

Update: 2023-08-11 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 688 கிராம ஊராட்சிகளிலும் வருகிற 15-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) சுதந்திர தினத்தன்று ஊராட்சி மன்ற தலைவர்களால் கொடியேற்றப்பட்டு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் வினியோகத்தை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல், அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துதல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் குறித்து விவாதிக்கப்படுகிறது.

மேலும் ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், தூய்மை பாரத இயக்கம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத்திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், குழந்தை பாதுகாப்பு திட்டம் ஆகிய பொருட்கள் பற்றியும் விவாதிக்கப்படுகிறது.

எனவே கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்