8-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய கொத்தனார், போக்சோவில் கைது
நாகையில் 8-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய கொத்தனாரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர
நாகையில் 8-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய கொத்தனாரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
கொத்தனார்
நாகை மாவட்டம் மேலப்பிடகையை சேர்ந்தவர் ராஜா (வயது 30). கொத்தனார். இவருக்கும் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்கள் 2 பேரும் கடந்த 3 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் அந்த பெண்ணின் மகள் 14 வயதான 8-ம் வகுப்பு மாணவிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது.
8-ம் வகுப்பு மாணவி கர்ப்பம்
இதை தொடர்ந்து அந்த மாணவியை சிகிச்சைக்காக நாகையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர் பரிசோதனை செய்த போது இந்த மாணவி 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக சிறுமியிடம் விசாரணை நடத்தினர். இதில் ராஜா அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
போக்சோவில் கைது
இதுகுறித்து சிறுமியின் தாய் நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர்.