இளம்பிள்ளை:-
ஆரூர்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 25). இவரும், ஓமலூர் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவரும் கொத்தனாராக வேலை செய்து வந்தனர். இருவரும் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் இளம்பிள்ளையில் இருந்து காடையாம்பட்டிக்கு கட்டிட வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் விஜயகுமார், சதீஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர், விஜயகுமார் இறந்து விட்டதாக கூறினார். மேலும் படுகாயம் அடைந்த சதீஷ் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து மகுடஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.