விபத்தில் கொத்தனார் பலி

மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிளில் மோதியதில் கொத்தனார் பலியானர்.

Update: 2022-09-07 19:44 GMT

கரூர் மாவட்டம் முத்தம்பட்டியை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 33). கொத்தனார். இவர் நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் கட்டிட வேலைக்காக தாராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். பாளையம்-அரவக்குறிச்சி சாலையில் குஜிலியம்பாறை அருகே உள்ள சத்திரப்பட்டி பகுதியில் சென்றபோது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி, சாலையோர மின்கம்பத்தில் பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட பிரேம்குமார் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து குஜிலியம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்