சம்பளம் வழங்காததால் கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை

விராலிமலை அருகே சம்பளம் வழங்காததால் தூக்குப்போட்டு கொத்தனார் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-09-13 18:57 GMT

விராலிமலை தாலுகா நம்பம்பட்டியை சேர்ந்தவர் சின்னகண்ணு மகன் பொன்னரசு (வயது 35). கொத்தனார். இவர், பொள்ளாச்சியில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வேலை பார்க்கும் இடத்தில் அவருக்கு முறையாக சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மன வேதனையில் பொன்னரசு பொள்ளாச்சியில் இருந்து தனது சொந்த ஊரான நம்பம்பட்டிக்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொன்னரசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்