கொத்தனார் வெட்டிக்கொலை

கொத்தனார் வெட்டிக்கொலை

Update: 2023-05-25 19:10 GMT

ஆடுதுறை அருகே கொத்தனார் வெட்டிக்கொலை செய்யப்பட்டாா்.

கொத்தனார்

கும்பகோணம் அருகே உள்ள நரசிங்கம்பேட்டை பச்சன அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் தனபால்(வயது38). இவர் கொத்தனார் வேலைபார்த்து வந்தார். நேற்று இரவு 7 மணி அளவில் மெயின் ரோட்டில் தனபால் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு 2 மோட்டார்சைக்கிள்களில் வந்த 3 பேர் கொண்ட மர்மகும்பல் தனபாலை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

இதில் நிலைகுலைந்த தனபால் சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே தனபால் பரிதாபமாக இறந்தார்.

காரணம் என்ன?

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருநீலக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் தப்பி ஓடிய மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கொலை முன்விரோதம் காரணமாக நடந்ததா? அல்லது சொத்து பிரச்சினை காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்