மின்சாரம் பாய்ந்து கொத்தனார் சாவு
மின்சாரம் பாய்ந்து கொத்தனார் உயிரிழந்தார்.
காட்டுப்புத்தூர்:
நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே மல்லு மச்சம்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ்(வயது 36). கொத்தனாரான இவர் திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் காந்திநகரில் உள்ள தர்மராஜ் என்பவரின் வீட்டில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.