கட்டுமான பணியின் போது தவறி விழுந்து தொழிலாளி சாவு

கொரடாச்சேரி அருகே கட்டுமான பணியின் போது தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தார்.

Update: 2023-03-31 19:00 GMT

கொரடாச்சேரி;

கொரடாச்சேரி அருகே கட்டுமான பணியின் போது தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தார்.

தவறி விழுந்தார்

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அருகே செம்மங்குடி யை அடுத்த புளிச்சங்காடியை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் (வயது 51). இவர் கம்பி பிட்டராக வேலை செய்து வருகிறார். இவர் கொரடாச்சேரி இளங்குடி அருகே நீர்த்தேக்க தொட்டி அமைக்க கம்பி கட்டும் பணியில் ஈடுபட்டார். அப்போது ஆரோக்கியதாஸ் எதிர்பாராத விதமாக கால் தவறி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் உச்சியில் இருந்து கீழே விழுந்தார்.

பரிதாப சாவு

இதில் ஆரோக்கிய தாஸ் தலையில் பலத்த காயமடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருவாரூர் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஆரோக்கியதாஸ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அவரது மனைவி சவுரியம்மாள் கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் கொரடாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்