மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை

வாணியம்பாடி அருகே மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2023-06-27 18:09 GMT

வாணியம்பாடியை அடுத்த அரபாண்டகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 35). கட்டிட மேஸ்திரி. இவர் பல நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று சிவகுமார் அவரது வீட்டில் தனியாக இருந்த போது, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த அம்பலூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சிவகுமாரின் உடலை வாணியம்பாடி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்