விவசாயியை தாக்கிய கொத்தனார் கைது

விவசாயியை தாக்கிய கொத்தனார் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-08 18:50 GMT

விராலிமலை தாலுகா, ஆவூர் அருகே உள்ள வெப்பாளம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 36), விவசாயி. இவரது வீட்டின் அருகே குடியிருப்பவர் மரியசூசை (38), கொத்தனார். இவருக்கும், ஆரோக்கியசாமிக்கும் பாதை தகராறு இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று ஆரோக்கியசாமி தனது வீட்டின் அருகே வேலி அமைப்பதற்காக கல் ஊன்றி உள்ளார். அப்போது அங்கு வந்த மரியசூசை பாதை இடத்தை கூடுதலாக சேர்த்து ஏன் கல் ஊன்றுகிறாய் என்று தகராறு செய்துள்ளார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மரியசூசை ஆரோக்கியசாமியை தாக்கியுள்ளார். மேலும் அவர் அங்கிருந்த கல்லுக் காலை கீழே சாய்த்து விட்டதில் ஆரோக்கியசாமியின் காலில் விழுந்து பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அருகே இருந்தவர்கள் காயமடைந்த ஆரோக்கியசாமியை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் மண்டையூர் சப்-இன்ஸ்பெக்டர் யுவராணி வழக்குப்பதிவு செய்து மரியசூசையை கைது செய்தார். பின்னர் அவரை கீரனூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்