பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்

கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று கலெக்டர் எச்சரித்து உள்ளார்.

Update: 2022-06-29 16:21 GMT


கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று கலெக்டர் எச்சரித்து உள்ளார்.

தடுப்பு நடவடிக்கை

இதுகுறித்து கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் பொதுஇடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவது, முகக்கவசம் அணிவது போன்ற அரசு அறிவித்துள்ள தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இதனை கடைபிடிக்காமல் கவனக்குறைவாக இருந்தால் தொற்று அதிகரித்து விடும். இதை தவிர்க்க பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல் போன்ற நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.

பரிசோதனை

இதனால் நோய் தொற்று பரவலை கட்டாயமாக கட்டுப்படுத்த முடியும். காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனையை அணுகி கொரோனா பரிசோதனை செய்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். பொது இடங்களில் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்