ராமசாமி கோவில் மாசி தேரோட்டம்

பாளையங்கோட்டை ராமசாமி கோவில் மாசி தேரோட்டம் நடந்தது.

Update: 2023-03-12 20:23 GMT

பாளையங்கோட்டை ராமசாமி கோவிலில் ஆண்டு தோறும் மாசி திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் காலை மற்றும் இரவில் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருதல் நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.

10-வது திருநாளான நேற்று காலை 8.30 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் ரதவீதிகளில் சுற்றி வந்து நிலையை அடைந்தது. தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இரவில் பூம்பல்லக்கில் சுவாமி வீதிஉலா வருதல் நடந்தது.

இன்று (திங்கட்கிழமை) தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்