மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-01-06 20:04 GMT

மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியினர் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஏ.ஐ.சி.சி.டி.யூ. மாநில தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்டப்பொதுச்செயலாளர் கணேசன் கோரிக்கையை விளக்கி பேசினார்.

சுமை தூக்கும் பணியில் அவுட் சோர்ஸ் கொள்முதல், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ரேஷன் கடைகளை கூட்டுறவுத்துறைக்கு மாற்றுதல் உள்ளிட்ட பொது வினியோகத்தை பாதிக்கும் தனியார்மய கொள்கையை கைவிட வேண்டும். சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி நேரம் முடிந்த பின்னர் வெளியாட்கள் கிட்டங்கியில் பணி செய்வதை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் ரமேஷ், நிர்வாகிகள் அய்யப்பன், வேல்முருகன், சுந்தர்ராஜ், கருப்பசாமி, ரவி டேனியல், மாரிமுத்து பேச்சிராஜா, வைகுண்டராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்