பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சிறப்பு சட்டம்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தல்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தி உள்ளது.

Update: 2022-06-19 16:02 GMT

மன்னார்குடி:-

மன்னார்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகர, ஒன்றிய குழுக்களின் சார்பில் கேரளாவில் நடந்த அகில இந்திய மாநாடு மற்றும் மதுரையில் நடந்த மாநில மாநாடு ஆகியவற்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த விளக்க கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு நகர செயலாளர் தாயுமானவன், ஒன்றிய செயலாளர் ஜெயபால் ஆகியோர் தலைமை தாங்கினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகையன், சி.ஐ.டி.யூ. மாவட்ட குழு உறுப்பினர் ஜெகதீசன் ஆகியோர் தீர்மானங்களை விளக்கி பேசினர். கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் நீண்ட ஆண்டுகளாக குடியிருப்பவர்களுக்கு குடி மனைப்பட்டா வழங்க வேண்டும். நீர்நிலை பகுதிகளில் வீடு கட்டி குடி இருப்பவர்களுக்கு உரிய மாற்று இடம் கொடுக்காமல் அவர்களின் வீடுகளை இடிக்க கூடாது. ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்த தனி சட்டம் கொண்டு வர வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் நகர குழு உறுப்பினர் தனுஷ்கோடி நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்