மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

12 மணி நேர வேலை மசோதாவை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-04-24 18:45 GMT

கோத்தகிரி, 

12 மணி நேர வேலை மசோதாவை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் முற்போக்கு மக்கள் மேடை சார்பில் கோத்தகிரியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். நிர்வாகி மகேஷ், மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ், நிர்வாகி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு 8 மணி நேர வேலை என்று இருந்ததை 12 நேர வேலையாக மாற்றம் செய்ததை கண்டித்தும், அந்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். இதில் பெண்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்