மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கடையநல்லூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2023-03-14 18:45 GMT

கடையநல்லூர்:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தென்காசி மாவட்ட குழு சார்பில் கடையநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் அயூப்கான் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கணபதி, வேலுமயில், உச்சிமாகாளி, குணசீலன், தங்கம், அசோக்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில குழு உறுப்பினார் பாஸ்கரன், மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் ஆகியோர் பேசினார்கள்.

திரிபுராவில் பா.ஜனதா கட்சியின் வன்முறையை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்