மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான விவசாய உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அறிவிக்காமல் பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் விஜய் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான விவசாய உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அறிவிக்காததை கண்டித்தும், உணவுக்கு வழங்கப்பட்ட மானியத்தை குறைத்ததை கண்டித்தும், 100 நாள் வேலை திட்டத்திற்கு கடந்த ஆண்டைவிட குறைவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.