கவர்னரை கண்டித்துமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கவர்னரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விருத்தாசலம்,
தமிழ்நாட்டின் சட்டமன்ற மாண்புகளை கவர்னர் ஆர்.என்.ரவி மீறிவிட்டதாகவும், அவர், தமிழ்நாட்டைவிட்டு வெளியேற வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் விருத்தாசலம் பெரியார் நகரில் ஆர்ப்பாட்டம நடைபெற்றது.
இதற்கு விருத்தாசலம் வட்ட செயலாளர் என்.எஸ். அசோகன் தலைமை தாங்கினார். கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருப்பையன், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநில துணைத்தலைவர் மூசா, மாவட்ட குழு உறுப்பினர் கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் வட்டக்குழு உறுப்பினர்கள் சுந்தரவடிவேல், ஜெயமணி, நெல்சன், சின்னத்தம்பி, செல்வகுமார், விவசாய சங்க வட்ட தலைவர் கோவிந்தன், மாதர் சங்க வட்ட செயலாளர் ஜெயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டு, கவர்னரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.