மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஏற்காட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஏற்காடு:-
ஏற்காட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னதாக ஏற்காடு பஸ் நிலையத்தில் இருந்து அக்கட்சியினர் ஊர்வலமாக தாசில்தார் அலுவலகம் சென்று, அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஒன்றிய செயலாளர் நேரு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்காடு பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் சண்முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் குணசேகரன் உள்பட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஏற்காடு லாங்கில் பேட்டை, ஜரினா காடு, எம்.ஜி.ஆர். நகர், முருகன் நகர், பட்டிப்பாடி, அக்கறையூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும், கொடிக்காடு கிராமத்திற்கு செல்லும் பாதையில் உள்ள வேலியை அகற்றி தார் சாலை அமைத்து தர வேண்டும். . ஏற்காடு சாலையோரங்களில் தள்ளுவண்டி வைத்து பிழைப்பு நடத்திய மக்களுக்கு மீண்டும் கடை வைக்க அனுமதி வழங்க வேண்டும். பட்டிப்பாடி, அக்கரையூர் கிராமத்தில் குடியிருக்கும் மக்களுக்கு மின் இணைப்பும், தெரு விளக்கும் அமைத்து கொடுக்க வேண்டும். ஏற்காடு ஏரியை பாதுகாக்க வேண்டும். ஏற்காடு மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.