மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

வடமதுரையை தனி தாலுகாவாக அறிவிக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-18 18:45 GMT

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வடமதுரை ஒன்றியக்குழு சார்பில், வடமதுரை 3 சாலை சந்திப்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் மலைச்சாமி தலைமை தாங்கினார். ஒன்றிய குழு உறுப்பினர்கள் சம்சுதீன், சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டக்குழு உறுப்பினர் குணசேகரன் வரவேற்றார்.


வடமதுரையை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும். வடமதுரை ஒன்றியத்தில் பாசன வசதிகளை மேம்படுத்தும் வகையில் காவிரி உபரி நீரை குளங்களில் நிரப்ப வேண்டும். வடமதுரை-தென்னம்பட்டி நான்கு வழிச்சாலை சந்திப்பில் மேம்பாலம் அமைக்க வேண்டும். கிராமப்புற மக்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.


ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மீனாட்சிசுந்தரம், ஜமால்முகமது, குணசேகர், முருகன், சண்முகம், மனோகரன் ஜோதிபாசு, ஜெயராஜ், காதர்மீரான் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் ஊர்வலமாக சென்று, வடமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்