மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ராஜபாளையத்தில் கண்ணில் கருப்பு துணி கட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2022-10-07 18:57 GMT

ராஜபாளையம், 

ராஜபாளையம் நகராட்சி முடங்கியார் சாலையில் பெரிய பாலம் அருகே குடிநீர் வால்வு சரி செய்யும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் பல மாதங்களாக மூடப்படாமல் இருந்தது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும் சரி செய்யப்படவில்லை. மேலும் 9, 10, 11, 12 ஆகிய வார்டுகளில் பாதாள சாக்கடை, தாமிரபரணி திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. இவற்றை சரி செய்ய வேண்டியும், வாரத்திற்கு ஒரு முறை கொசு மருந்து அடிக்க வலியுறுத்தியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சம்பந்தபுரம் மற்றும் சீதக்காதி தெரு ஆகிய கிளைகளின் சார்பில் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர் குழு உறுப்பினர் முருகானந்தம் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் பால மஸ்தான் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் மாரியப்பன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத்தலைவர் கணேசன், நகர் குழு உறுப்பினர் சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்