மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆவுடையார்கோவில்:
ஆவுடையார்கோவில் அருகே பெருமருதூர் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கிளைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு எம்.எஸ்.டி. பிரபாகரன் தலைமை தாங்கினார். ஆர்பாட்டத்தில் பெருமருதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை முழுநேர மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். பயிர்காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், தொடக்கக் கூட்டுறவு சங்கத்தில் போதிய அளவு உரம் இருப்பு வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் மாவட்ட குழு சுப்பிரமணியன், ஆவுடையார்கோவில் தாலுகா செயலாளர் நெருப்பு முருகேஷ் மற்றும் எம்.எஸ்.கலந்தர், அழகர் ஆகிய தாலுகா குழு உறுப்பினர்கள் மற்றும் கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.