மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேளாங்கண்ணி:
மின் கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மேலைப்பிடாகை மின்சார வாரிய அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் மாரிமுத்து கலந்து கொண்டு பேசினார். இதில் மாவட்ட குழு உறுப்பினர் சித்தார்த்தன், சுஜாதா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணன், முருகையன், ராமலிங்கம் பன்னீர்செல்வம் உள்பட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.