மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
வந்தவாசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
வந்தவாசி
வந்தவாசி தபால் நிலையம் முன்பு மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்டார தலைவர் அப்துல்காதர் தலைமை தாங்கினார். சிவராமன், மாரிமுத்து, முரளி, வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செல்வம், சங்கரன் ஆகியோர் பேசினர்.
முன்னதாக வந்தவாசி பழைய பஸ் நிலையம் அருகே இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஊர்வலமாக சென்று அத்தியாவசிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி போட்ட மத்திய அரசு கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர்.
இதைத்தொடர்ந்து வந்தவாசி தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, பருப்பு, பால், மோர், வெல்லம் உள்ளிட்டவைகளுக்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.
இதில் சுகுமார், சங்கர், முருகன், ராதாகிருஷ்ணன், அரிதாசு சரஸ்வதி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.