மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்

சங்கரன்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-10-20 18:45 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் தேரடி திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இஸ்ரேலை கண்டித்து நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தாலுகா செயலாளர் அசோக்ராஜ் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி மாவட்ட செயலாளர் இசக்கிதுரை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் லிங்க வளவன், பார்வர்டு பிளாக் மாவட்ட செயலாளர் தங்கப்பாண்டியன், ம.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் பொன் ஆனந்தராஜ், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட தலைவர் அப்பாஸ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் திவான் மைதீன் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்