மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2023-08-14 20:01 GMT

பட்டுக்கோட்டை, கும்பகோணம் பகுதியில் காவிரியில் தண்ணீரை திறந்துவிடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பட்டுக்கோட்டை

தண்ணீர் இன்றி கருகும் குறுவை பயிரை காப்பாற்ற கர்நாடக அரசு காவிரி தண்ணீரை திறந்து விடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி்யினர் நேற்று காலை பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றியச்செயலாளர் கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்டச்செயற்குழு உறுப்பினர் செல்வம் கண்டன உரையாற்றினார். இதில் மெரினா ஆறுமுகம் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய தலைவர் மகாலிங்கம், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேராவூரணி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழுக்களின் சார்பில் ெரயில்வே நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர்கள் வேலுச்சாமி (சேதுபாவாசத்திரம்), ரெங்கசாமி (பேராவூரணி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கும்பகோணம்

கும்பகோணம் காந்திபூங்கா அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் மனோகரன் தலைமை தாங்கினார். இதில் விவசாய சங்க மாவட்ட துணை தலைவர் கணேசன், கும்பகோணம் நகர செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கர்நாடக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்