அரசியல் விளக்கப் பொதுக் கூட்டம்

அரசியல் விளக்கப் பொதுக் கூட்டம்

Update: 2023-06-20 12:17 GMT

அனுப்பர்பாளையம்,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி திருமுருகன் பூண்டி நகராட்சி கிளைகள் சார்பில் அரசியல் விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி 10-வது வார்டு கவுன்சிலர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

பண மதிப்பிழப்பு மூலம் இந்தியாவில் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. அப்போது பிரதமர் கருப்பு பணத்தை ஒழித்து விடலாம் என்று கூறினார். ஆனால் அதை ஒழிக்கவே முடியவில்லை. 2000 ரூபாய் நோட்டும் பிரதமர் மோடியும் ஒன்று. ஏனென்றால் ஏழை கையில் என்றைக்கும் சிக்காது. எப்ப செல்லாமல் போகும் என்று அதுக்கே தெரியாது. உண்மையிலேயே 2000 ரூபாய் நோட்டு தற்பொழுது செல்லாமல் போயிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரங்கராஜ், நந்தகோபால், ஒன்றிய கவுன்சிலர் முத்துசாமி, மாவட்ட குழு உறுப்பினர் வெங்கடாசலம், ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியம், வேலுச்சாமி, மோகனசுந்தரம், திருமுருகன்பூண்டி நகர மன்ற உறுப்பினர் தேவராஜன், கிளைச் செயலாளர் அவிநாசியப்பன், காளிமுத்து, காமராஜ், ராஜ், வையாபுரி, சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்