ஏரலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஏரலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-07-30 18:45 GMT

ஏரல்:

ஏரல் காந்தி சிலை அருகில் மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறியதுடன், பொது சிவில் சட்டம் கொண்டுவர முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சி நகர செயலாளர் பெஸ்டி தலைமை தாங்கினார். ஐக்கிய ஜமாத் செயலாளர் ஜாகிர் உசேன் முன்னிலை வகித்தார். நகர காங்கிரஸ் தலைவர் பார்க்கர் அலி, ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கோட்டாளம், ஏரல் பேரூர் செயலாளர் ராயப்பன், மார்க்சிஸ்ட் கஒன்றிய செயலாளர் நம்பிராஜன், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் அம்பிகா, இளம் சிறுத்தைகள் பாசறை மாவட்ட அமைப்பாளர் செழியன், தூத்துக்குடி கிறிஸ்தவர்கள் வாழ்வுரிமை இயக்கம் இயக்குனர் பெஞ்சமின் டி சூசா, யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட துணைத் தலைவர் சாகுல் ஹமீது மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்