மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்

Update: 2023-09-12 19:33 GMT

திருச்சி வடக்கு காட்டூரை சேர்ந்தவர் டேவிட்ரீகன் (வயது 38). பெயிண்டிங் தொழிலாளியான இவர் பணியின் போது, மின்சாரம் தாக்கி இறந்தார். எனவே அவரது குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். கட்டிடத்துக்கு அனுமதி அளித்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று காலை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ஸ்ரீதர், வெற்றிச்செல்வன் மற்றும் உயிரிழந்த டேவிட் ரீகனின் குடும்பத்தினர், உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்