மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
எட்டயபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
எட்டயபுரம்:
எட்டயபுரம் மேலவாசல் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு எட்டயபுரம் தாலுகா குழு உறுப்பினர் கண்ணன் தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ரவீந்திரன் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் எட்டயபுரம் பகுதியில் வாரம் ஒருமுறை குடிநீர் வழங்க வேண்டும். சுத்தமான சீவலப்பேரி குடிநீர் வழங்க வேண்டும். பாண்டியன் கண்மாய் தண்ணீரை கலந்து விடக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் தனபால், மாணிக்கவாசகம், ஜீவராஜ், செல்வக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.