மருதுபாண்டியர் நினைவு தினம்: விருதுநகர் மாவட்டத்தில் இன்று டாஸ்மாக் கடைகள் அடைப்பு
விருதுநகர் மாவட்டத்தில் இன்று அனைத்து டாஸ்மாக்கடைகளும் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
விருதுநகர்,
மருதுபாண்டியர் சகோதரர்கள் நினைவு தினம் இன்று நடைபெறுவதையொட்டி விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக்கடைகளும், தனியார் மதுபான விற்பனைஸ்தலங்களும் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதேபோன்று பசும்பொன் தேவர் குருபூஜையை முன்னிட்டு வருகிற 29-ந் தேதி மாலை 6 மணி முதல் 30-ந் தேதி வரை அனைத்து டாஸ்மாக் கடைகளும், தனியார் மதுபான விற்பனை ஸ்தலங்களும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது