குளத்தில் மூழ்கி தியாகி சாவு

கீழ்வேளூரில் குளத்தில் மூழ்கி தியாகி உயிரிழந்தார்.

Update: 2022-07-23 15:10 GMT

சிக்கல்:

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அண்ணா நகரை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 87). மொழிப்போர் தியாகியான இவர், கீழ்வேளூர் 8-வது வார்டு தி.மு.க.அவை தலைவராக இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற தங்கவேல் மீண்டும் திரும்பி வரவில்லை.இதை தொடர்ந்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை உறவினர்கள் ஆய்வு செய்த போது, தங்கவேல் அந்த பகுதியில் உள்ள அரசாணி குளத்துக்கு சென்றது தெரிய வந்தது.இதுகுறித்து கீழ்வேளூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து குளத்தில் இறங்கி தேடி தங்கவேல் உடலை மீட்டனர். மேலும் சம்பவ இடத்துக்கு வந்த கீழ்வேளூர் போலீசார் தங்கவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குளத்தில் தவறி விழுந்து தங்கவேல் இறந்தாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக அரசு அறிவித்த மொழிப்போர் தியாகிக்கான ரூ.1 லட்சத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் கடந்த மே மாதம் தங்கவேல் வீட்டுக்கு நேரில் சென்று அவரிடம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்