தியாகி விஸ்வநாத தாஸ் நினைவு தினம்

தியாகி விஸ்வநாத தாஸ் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

Update: 2022-12-31 19:14 GMT

சுதந்திர போராட்ட வீரர் தியாகி விஸ்வநாத தாஸ் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் அவரது உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தியாகி எஸ்.எஸ்.விஸ்வநாத தாஸ் தேசிய பேரவை தலைவர் சுரேஷ் முத்துராஜ் தலைமை தாங்கினார். நல்லாசிரியர் செல்லப்பா முன்னிலை வகித்தார். செயலாளர் சிதம்பரம் வரவேற்றார்.

இதில் தமிழ் முழக்க பேரவை செயலர் எம்.ஏ.நசீர், டீம் அசோசியேசன் தலைவர் ஜெயமணி, வக்கீல் செல்வ சூடாமணி உள்ளிட்டோர் விஸ்வநாத தாஸ் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். மேலும் விஸ்வநாத தாஸ் வாழ்கை வரலாறு குறித்து பேசினார்கள்.

நிர்வாகிகள் மாணிக்கம், மீனாட்சிசுந்தரம், நமச்சிவாயம், பொன்ராஜ், சங்கரநயினார், ராமலிங்கம், சண்முகவேல், சிவபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்