மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி

பெரணமல்லூர் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி நடந்தது.

Update: 2023-02-12 16:06 GMT

சேத்துப்பட்டு

திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி உத்தரவின் பேரில் பெரணமல்லூர் ஒன்றியத்தில் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு மற்றும் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு ராணிலட்சுமிபாய் திட்டத்தில் தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது.

அதன்படி பெரணமல்லூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜா, சரவணராஜ், ஆகியோர் முன்னிலையில் பெரணமல்லூர் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு தற்காப்பு கலையான கராத்தே, ஜூடோ, சிலம்பம், டேக்வாண்டோ ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

பயிற்சியாளர்கள் தனசேகரன், சந்தோஷ், பெரியசாமி, தேவநாயகம், சதீஷ், சீனிவாசன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

இதேபோல் பெரணமல்லூர் ஒன்றியத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் பயிற்சி நடைபெறும் என்று வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜா தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்