தற்காப்பு கலை பயிற்சி
கொரடாச்சரி அருகே அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி நடந்தது
கொரடாச்சேரி, பிப்.18-
கொரடாச்சேரி வட்டாரத்தில் உள்ள காட்டூர், தேவர்கண்டநல்லூர், குளிக்கரை, பெரும்புகலூர், அம்மையப்பன், கொரடாச்சேரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள அரசு பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு தற்காப்பு கலைகள் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் பங்கேற்ற மாணவிகள் பயிற்சி மூலம் தங்களுக்கு புத்துணர்வு கிடைப்பதாகவும் தன்னம்பிக்கை அதிகரிப்பதாகவும் கூறினர். மாணவிகளின் மன தைரியத்தை அதிகப்படுத்தும் விதத்தில் நடைபெறும் விழிப்புணர்வு தற்காப்பு கலை பயிற்சி மாணவர்களின் படிப்பில் முக்கிய அம்சமாக திகழும் என கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.