திருநகரில் தெருவில் எச்சில் இலைகளை கொட்டிய திருமண மண்டபத்திற்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

திருநகரில் தெருவில் எச்சில் இலைகளை கொட்டிய திருமண மண்டபத்திற்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

Update: 2023-05-29 21:43 GMT

திருப்பரங்குன்றம்

மதுரை மாநகராட்சி 94-வது வார்டான திருநகர் பகுதியில் நேற்று காலை 7 மணியளவில் மாநகராட்சி கவுன்சிலர் ஸ்வேதா ஜெரார்டு சத்யன், இருசக்கர வாகனத்தில் வந்து தெருக்களில் சேரும் குப்பைகள் அகற்றப்படுகிறதா? என ஆய்வு செய்தார். இந்த நிலையில் திருநகர் 1-வது பஸ் நிறுத்தம் அருகே மாநகராட்சி 94-வது வார்டு அலுவலகம் பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் இருந்து எச்சில் இலைகள் ரோட்டில் கொட்டப்பட்டு இருந்ததாக தெரிகிறது. அதை கண்ட கவுன்சிலர், தனது செல்போனில் மாநகராட்சி துப்புரவு பிரிவு அதிகாரியிடம் தொடர்பு கொண்டு ரோட்டில் குவியலாக கொட்டப்பட்டுள்ள எச்சில் இலைகள் சார்ந்த குப்பையை உடனடியாக அள்ள வேண்டும். இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். என்று வலியுறுத்தினார். இந்த நிலையில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ரோட்டில் இருந்து எச்சில் இலைகளை லாரிகள் மூலம் அப்புறப்படுத்தி வெளியே கொண்டு சென்றனர். இதற்கிடையில் துப்புரவு பிரிவு அதிகாரிகள், அந்த திருமண மண்டபத்திற்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். இந்த தகவல் பொதுமக்கள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்